ரயில்களில் கட்டாயமாக்கப்படும் பயணசீட்டு பரிசோதனை!

#SriLanka #Railway #Lanka4 #Train #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரயில்களில் கட்டாயமாக்கப்படும் பயணசீட்டு பரிசோதனை!

ரயில்களில் பயணசீட்டின்றி பயணிக்கும் பயணிகள் மீதான சோதனைகளை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக, ரயில் பயணிகளின் டிக்கெட் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.   இதன் காரணமாக டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்க அதிக ஊக்கம் அளிப்பதாக ரயில்வே துறை கூறுகிறது.  இந்நிலையிலேயே டிக்கெட் சோதனையை முன்னெடுக்க தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஆகஸ்ட் முதல் இதுவரையான காலப்பகுதியில், மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து பயணச்சீட்டு இன்றி பயணித்த பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 225,000 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. 

பயணச்சீட்டு இன்றி பயணித்த 72 பயணிகளிடமிருந்து இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர்  கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4