இந்திய வெளிவகார அமைச்சரை சந்தித்த இலங்கை வெளிவிகார அமைச்சர்!

#India #SriLanka #Sri Lanka President #Ali Sabri #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இந்திய வெளிவகார அமைச்சரை சந்தித்த இலங்கை வெளிவிகார அமைச்சர்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர்.

 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் இன்னமும் அமெரிக்காவில் தங்கியிருந்து உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

 அதன் ஓரங்கமாக அமைச்சர் அலி சப்ரிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு   முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

 இச்சந்திப்பின்போது இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்துக் கலந்துரையாடியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

 அதேவேளை, நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் அச்சிம் ஸ்டெய்னரை சந்தித்த அமைச்சர் சப்ரி, டிஜிட்டல் மயமாக்கம், காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மை, சக்திவலு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறந்த திட்டங்கள் தொடர்பில் அவர் தனது பாராட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 மேலும், பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் பிரதி செயலாளர் நாயகம் லி ஜுன்ஹுவாவுக்கும் அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்றது. 

 இதன்போது பொருளாதார ரீதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் லி ஜுன்ஹுவா பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

அத்தோடு 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4