மணல் நெருக்கடியை தளர்த்தியது அபிவிருத்திக்குழு - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி

#SriLanka #Douglas Devananda #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
மணல் நெருக்கடியை தளர்த்தியது அபிவிருத்திக்குழு - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி

மணல் நெருக்கடியை அபிவிருத்திக்குழு தளர்த்தியுள்ளது. அதனடிப்படையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிப் பத்திரத்துடன் மணல் ஏற்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முறையான அனுமதிப் பத்திரம் பெறப்பட்டு, அனுமதிக்கப்பட்ட பகுதியில் மணல் ஏற்றி அனுமதிப் பத்திரத்திற்கு அமைவாக மணல் ஏற்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 ஆயினும், பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினரின் கண்காணிப்பு தொடர்ந்தும் இருக்கும் எனவும், சட்டவிரோத மண்ணகழ்விற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவற்றை கண்காணிக்க பிரதேச செயலாள்கள், கிராம சேவையாளர்களின் முறையான கண்காணிப்பும் இருக்கும் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

 விடுபட்ட அபிவிருத்தி பணிகளை பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் உடன் ஆரம்பிக்கும் வகையிலும், ஏனைய செயற்பாடுகளிற்கான மணல் அனுமதி எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 10 நாட்களிற்கு முன்னர் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4