IMF பிரதிநிதிகளுடனான இறுதி கலந்துரையாடல் இன்று : ரணில் பங்கேற்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
IMF பிரதிநிதிகளுடனான இறுதி கலந்துரையாடல் இன்று : ரணில் பங்கேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (26.09) இடம்பெறவுள்ளது.  

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விரிவான கடன் வசதியின் கீழ் மீளாய்வு கலந்துரையாடல் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது. 

இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில், இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பெற்றுக்கொள்வது மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  

ஏறக்குறைய 2 வாரங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல் தொடரின் இறுதிக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. 

இந்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4