பாடசாலை மாணவர்களை போரில் ஈடுபடுத்த திட்டமிடும் ரஷ்யா!

#world_news #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாடசாலை மாணவர்களை போரில் ஈடுபடுத்த திட்டமிடும் ரஷ்யா!

பாடசாலை மாணவர்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கும் ரஷ்யாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. 

உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடங்கி ஏறக்குறைய ஒன்றரை வருடங்களைக் கடந்துள்ளது. பேரில் இருத் தரப்புகளும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. 

இதற்கிடையே ரஷ்யாவானது பாடசாலை மாணவர்களுக்கும் போர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் கடந்த வருடமே வெளியாகின. போர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்நிலையில்,  தற்போது பாடசாலை மாணவர்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதன்படி அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு பதுங்கு குழி அமைப்பது, கைக்குண்டுத் தாக்குதல், துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பயிற்சிகளுக்கு மாணவர்கள் வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. உயர்நிலை பாடசாலைகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும், மாணவர்கள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடத்தப்படுகிறது.  இதற்கு சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்புகளை தெரிவித்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4