தென்னிந்தியாவில் முதல் முறையாக 'ரவுடி பேபி' பாடல் 150 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
தென்னிந்தியாவில் முதல் முறையாக 'ரவுடி பேபி' பாடல் 150 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'மாரி-2'. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதியிருந்தார். தனுஷ் மற்றும் பாடகி தீ ஆகியோர் பாடியிருந்தனர். அதோடு இந்த பாடலின் நடன இயக்குனர் பிரபுதேவா, தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த வீடியோ மற்றும் நடனம் யூடியூப்பில் வைரலானது.

தமிழில் வெளியான இந்த பாடல் வீடியோ, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது 'ரவுடி பேபி' பாடல் யூடியூப்பில் 150 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. யூடியூப்பில் இத்தனை கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை 'ரவுடி பேபி' பாடல் வீடியோ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!