தவறாக வழிக்காட்டிய கூகுள் மேப் : கணவரை இழந்த பெண்!

#world_news #Lanka4 #google #sri lanka tamil news
Thamilini
2 years ago
தவறாக வழிக்காட்டிய கூகுள் மேப் : கணவரை இழந்த பெண்!

கூகுள் மேப்ஸில் உள்ள வழிமுறைகளைப் பின்ப்ற்றி பயணம் செய்த தனது கணவர் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

வட கரோலினா பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பெண்  கூகுளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.  

அவர் பயணித்த சாலையில் ஆபத்தான இடங்கள் குறித்து கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் தனது கணவர் உயிரிழந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  

கடந்த ஆண்டு செப்டம்பரில் பிலிப் பாக்ஸன் நண்பரின் வீட்டிற்குச் சென்று திரும்பியபோது அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பிலிப்பின் மனைவி, தனது கணவர் சென்ற பாதை அவருக்குத் தெரியாததால், கூகுள் மேப்ஸில் உள்ள வழிமுறைகளின்படி அவர் தனது காரை ஓட்டியதாகக் கூறினார். அவர் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததாகவும், மேகமூட்டமாக இருந்ததால் சாலை தெளிவாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கூகுள் மேப்ஸில் உள்ள வழிமுறைகளின்படி, அவர் ஒரு பாலத்தின் மீது பயணம் செய்த நிலையில், பாலம் இடிந்து விழுந்து அவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. 

இந்த பாலம் 9 வருடங்களுக்கு முன்னர் இடிந்து விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்த தகவலை கூகுள் மேப்  அப்டேட் செய்யாததே தனது கணவரின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று கூகுள் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

குற்றம் சாட்டி பிலிப்பின் மனைவி வழக்கு தொடர்ந்தார். எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை நடத்தி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4