நிபா வைரஸ் தொற்று : சிறப்பு பரிசோதனை கருவிகளை கொண்டுவர நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Virus #Nipah
Dhushanthini K
1 year ago
நிபா வைரஸ் தொற்று : சிறப்பு பரிசோதனை கருவிகளை கொண்டுவர நடவடிக்கை!

இந்தியா உட்பட பல நாடுகளில்  நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனைக்  கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  .  

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும்  சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.  

எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இது குறித்து கருத்து தெரிவித்த வைராலஜிஸ்ட் டாக்டர் ஜானகி அபேநாயக்க, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை  நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!