“நிபா” வைரஸ் பரவுவதால் பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

#SriLanka #Keheliya Rambukwella #Fruits #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
10 months ago
“நிபா” வைரஸ் பரவுவதால்  பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

தற்போது பல நாடுகளில் பரவி வரும் “நிபா” வைரஸ் குறிப்பாக பழங்களை உண்ணும் வௌவால்களில் அதிகம் காணப்படுவதால், விலங்குகளின் பற்களால் பாதிக்கப்பட்ட பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என தொற்றுநோயியல் துறை மக்களுக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் ப்ரூட் வௌவால் (Fruit Bat) இனங்கள் இருப்பதாகத் தகவல்கள் இல்லை என தொற்றுநோயியல் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

 பெரியவர்கள் இவ்வாறு பழுதடைந்த பழங்களைச் சாப்பிட்டால் நன்றாகக் கழுவிச் சாப்பிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த வைரஸ் வௌவால்களில் பெருகி, அவற்றின் உமிழ்நீரில் சேகரமாகும் என்றும், இந்த உமிழ்நீர் பழங்கள் அல்லது ராமுட்டியுடன் கலந்தால், அவை மனித உடலுக்குள் செல்லக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 இந்த வைரஸ் தொடர்பில் தொற்றுநோயியல் திணைக்களம் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து தேவையான தகவல்களை பெற்று வருவதாகவும் வைத்தியர் கினிகே தெரிவித்தார். இந்தியாவின் கேரளாவில் தற்போது 6 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அதில் 2 பேர் இறந்துள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த வைரஸ் உலகிற்கு புதியதல்ல எனவும், இது அவ்வப்போது பரவும் வைரஸ் எனவும் தொற்றுநோயியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.