திருகோணமலை பகுதியில் மோட்டார் வெடிகுண்டு மீட்பு!
#SriLanka
#Trincomalee
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago

திருகோணமலை - கின்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து மோட்டார் குண்டொன்று இன்று (22.09) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பூர் நவரெட்ணபுரம் காட்டுப்பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விரு விடயங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



