உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி

#Attack #Russia #Ukraine #War #GunShoot #2023 #Breakingnews #Russia Ukraine #Killed
Mani
11 months ago
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷியா சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக கட்டடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.

இந்த தாக்குதலில் உக்ரைனின் தெற்கே உள்ள கெர்சோன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கட்டமைப்புகளில் ஒன்றின் இடிபாடுகளில் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர், மேலும் 18 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.