காணி அனுமதி பத்திரத்தை தயாரிக்க இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது!

#SriLanka #Arrest #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
காணி அனுமதி பத்திரத்தை தயாரிக்க இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது!

இலங்கை மகாவலி அதிகார சபையின் நொச்சியாகம அலகின் பதில் முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நொச்சியாகம பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சந்தேக நபரை நேற்று (20.09) பிற்பகல் கைது செய்துள்ளனர். 

முறைப்பாட்டாளரின் உயிரிழந்த தந்தைக்கு சொந்தமான காணிக்கான அனுமதிப்பத்திரத்தை தயாரிப்பதற்காக 75,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபரான முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4