வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளுக்கு நடந்தது என்ன? ஆதாரங்கள் வெகு விரைவில் வெளியிட முடிவு

#SriLanka #Death #Investigation #Lanka4 #Sri Lankan Army #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளுக்கு நடந்தது என்ன? ஆதாரங்கள் வெகு விரைவில் வெளியிட முடிவு

இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

 இந்த நிலையில், இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியில், போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிருடன் உள்ளார்கள் எனப் பல செய்திகள் வெளிவருகின்றன.

images/content-image/1695142709.jpg

 வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி போலியானது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார். ''இதுவொரு நாடகம். தமது கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கின்றார்கள். 

இது நகைச்சுவையான விஷயம்" என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பெப்ரவரி மாதம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

images/content-image/1695142749.jpg

 இந்தக் கருத்தானது அந்த சந்தர்ப்பத்தில் பேசு பொருளாக மாறியது. எனினும், வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின்போது உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. ''கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

 டீ.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார். குறித்த திகதியில் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். 

images/content-image/1695142804.jpg

போலியான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள்,” என இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தெரிவித்திருந்தார்.அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா மற்றும் அவரின் மனைவி மதிவதனி ஆகியோர் உயிருடன் உள்ளார் என்ற விஷயம் அண்மையில் பேசு பொருளாக மாறியது.

 அந்தப் பேச்சு தனிந்துள்ள நிலையில், அவர்களின் மகள் துவாரகாவிற்கு இறுதிக்கட்டபோரில் நடந்தது என்ன? என்ற ஆதாரங்கள் வெகு விரைவில் இன்னும் சில தினங்களில் முன்னாள் போராளிகள் வெளியிட உள்ளனர்.எனத்தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

images/content-image/1695142972.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!