பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து 8 பேர் உயிரிழப்பு

#India #Accident #people #Bus #Tamilnews #Breakingnews #ImportantNews #Punjab
Mani
2 years ago
பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து 8 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் பீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது . விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தின்போது மழை பெய்து கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து அந்த நபர்களை காப்பாற்றினர்.

இதுகுறித்து முக்த்சார் துணை கமிஷனர் ரூஹீ டக் கூறுகையில், "கால்வாயில் பலத்த நீரோட்டத்தால் சில பயணிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்த பல பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4