மலேசியாவில் தொழிலாளர் சட்டங்களை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

#government #Law #Singapore #company #Bussinessman
Prasu
2 years ago
மலேசியாவில் தொழிலாளர் சட்டங்களை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக இந்த ஆண்டு இதுவரை 400 நிறுவனங்களுக்கு எதிராக மலேசியா நடவடிக்கை எடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை மேற்கோள்காட்டி உள்நாட்டு செய்தி நிறுவனமான "Bernama" செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமைச்சகத்தின் தொழிலாளர் துறை 272 முதலாளிகளுக்கு எதிராக மொத்தம் 463,000 டொலரை அதாவது மலேசிய ரூபாயில் 2.17 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

இதில் தொழிலாளர் விதிமீறல்களில் சட்டவிரோத ஊதியக் கழிவுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சர் நிறுவனங்களின் பெயரையோ, தொழிலாளர் குற்றங்கள் குறித்த விவரங்களையோ இங்கு தெரிவிக்கவில்லை.

பாம் எண்ணெய் முதல் வைத்திய கையுறைகள் அனைத்தையும் உற்பத்தி செய்யும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் மலேசியா ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது.

இதேவேளை, மலேசிய நிறுவனங்கள், நாட்டின் உற்பத்தி மற்றும் பெருந்தோட்டத் தொழில்களில் பரவலாகப் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கத் தடைகளை எதிர்கொண்டுள்ளன.

 மேலும், மலேசியா எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4