பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் மாயம்

#India #Death #Accident #people #2023 #Breakingnews #ImportantNews #Boat #River
Mani
2 years ago
பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் மாயம்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பஹ்மதி ஆற்றில் நேற்று படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 30 நபர்களை ஏற்றிக்கொண்டு பத்ஹமா கட் நோக்கி சென்று கொண்டிருந்தது.

மதுர் கட் என்ற பகுதியில் சென்றபோது படகு திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

படகு விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனாலும், இந்த படகு விபத்தில் தண்ணீரில் மூழ்கி 40 வயது நபர் மற்றும் 4 வயது குழந்தை என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆற்றில் கொண்டு செல்லப்பட்ட சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!