டயனா கமகேவின் வழக்கு விசாரணை நிறைவடைந்தது!
#SriLanka
#Court Order
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனுவின் தீர்ப்பை ஒக்டோபர் 18 ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதானவிசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14.09) இடம்பெற்றது.
மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒக்டோபர் 18 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சமூக ஆர்வலர் ஓஷலா ஹேரத், கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.