நின்று கொண்டிருத்த பேருந்து மீது லாரி மோதல் 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

#India #Death #Accident #people #Import #Breakingnews #Died #Rajasthan
Mani
2 years ago
நின்று கொண்டிருத்த பேருந்து மீது லாரி மோதல் 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் விர்ந்தவன் நகருக்கு இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அதிகாலை 4.30 மணியளவில் பேருந்து எதிர்பாராதவிதமாக பழுதடைந்தபோது அதில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தனர்.

இதையடுத்து, ஓட்டுநரும் பயணிகளும் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் வாகனத்தின் பின்புறம் நின்றுள்ளனர். அப்போது, ​​வேகமாக வந்த லாரி, சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 11 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4