பிரம்மாண்ட போர் பயிற்சியை நடத்தும் நேட்டோ!

#world_news #War #Lanka4 #sri lanka tamil news #NATO
Thamilini
2 years ago
பிரம்மாண்ட போர் பயிற்சியை நடத்தும் நேட்டோ!

நேட்டோ ராணுவ வீரர்கள்  பிரம்மாண்ட போர் ஒத்திகையை மேற்கொள்ள இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.  

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. 

நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் ஒருபக்கம் ரஷ்யாவிற்கு எதிராக நிற்க, சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் மட்டும் ரஷ்யாவிற்கு ஒருவித மறைமுக ஆதரவை கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் பனிப்போருக்கு பிறகு பிரம்மாண்டமான போர் பயிற்சியை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பு அடுத்த ஆண்டு நடத்த இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த போர் பயிற்சியில் ஸ்வீடன் உட்பட நேட்டோ நாடுகளை சேர்ந்த மொத்தம் 41,000 ராணுவ வீரர்கள் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த போர் பயிற்சியானது ஜேர்மனி,போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. 

ரஷ்ய அத்துமீறல்களை எதிர்கொள்வதே போர் பயிற்சியின் முக்கிய நோக்கம் என பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4