பிரித்தானியா மருந்தகங்களில்பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டம்

#Sri Lanka #Death #Health #Hospital #Lifestyle #Lanka4 #tablets #Tamil News
Kanimoli
2 months ago
பிரித்தானியா மருந்தகங்களில்பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டம்

பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அளவுக்கு மீறினால்... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி உண்டு. 

எந்தப் பொருளுமே அளவுக்கு மீறினால் உடலுக்கு தீங்கைத்தான் ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வுகள், அளவுக்கு மீறி தண்ணீர் அருந்துவது கூட சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றன. பல நாடுகளில், தலை வலியோ, உடல் வலியோ வந்தால், உடனடியாக பார்மஸி என்னும் மருந்தகத்துக்குச் சென்று பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது.

 மாதவிடாய் நாட்களில், வலியை சமாளிக்க தொடர்ச்சியாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் இளம்பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பாராசிட்டமால் மாத்திரையின் உறையில் பார்ப்பீர்களானால், அதில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அளவுக்கு மீறி பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

 பகீர் பின்னணி இந்த விடயம் நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால், இதை அறிந்தவர்களோ, தங்கள் அறிவை தவறாக பயன்படுத்தும்சம்பவங்களும் இன்னொரு பக்கம் நடப்பதை மறுப்பதற்கில்லை. ஆம், தற்கொலை செய்துகொள்ள விரும்பும் சிலர், பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக பிரித்தானிய தரப்பில் தகவல்கள் உள்ளன.

 2018ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் மருந்து பாராசிட்டமால் என்பது தெரியவந்துள்ளது. அரசு திட்டம் ஆகவே, மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரைகள் விற்பனையை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.

 தற்போது, மக்கள் மருந்தகங்களுக்குச் சென்று 500 மில்லிகிராம் பாராசிட்டமால் மாத்திரைகளில் 16 மாத்திரைகளை ஒரே நேரத்தில் வாங்கமுடியும். இந்த எண்ணிக்கையைக் குறைக்கவும், அதன் மூலம் தற்கொலைகளைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு