கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு

#India #Hospital #Disease #Kerala #Virus #Nipah
Prasu
2 years ago
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதுதவிர கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய சுகாதார குழுவினரை அனுப்பி வைத்துள்ளார். இந்த குழு கேரளா மாநிலத்தில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்ய உள்ளது.

மேலும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. 

இதோடு மாவட்டம் முழுக்க எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4