வயது முதிர்ந்தவர்களிடம் நீரிழிவு நோயுண்டா என்பதற்குரிய அறிகுறிகள்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #சலரோகம் #Hypertension
Mugunthan Mugunthan
9 months ago
வயது முதிர்ந்தவர்களிடம் நீரிழிவு நோயுண்டா என்பதற்குரிய அறிகுறிகள்

முதியவர்களிடையே காணப்படும் நாள்பட்ட நோய்களில் ஒன்றுநீரிழிவு நோய். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33% பேருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

. நீரிழிவு என்பது ஒரு நபரின் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது உருவாகலாம்.

 இந்த இரண்டின் கலவையும் நோய்க்குக் காரணமாக இருக்கலாம். உடல் இன்சுலினில் சிக்கல் இருப்பதாக ஒருவர் உணரும்போது உடல், ரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் சேரும்.

 இது உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை உருவாக்கும். நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான வடிவம் டைப் 2. குறிப்பாக, வயதானவர்களிடையே இது அதிகம் காணப்படுகிறது.

 ரத்தச் சர்க்கரைக் குறைவு, இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் வயதானவர்களுக்கு வருவதற்கு அதிக சாத்தியம் உண்டு. 

நீரிழிவு நோயை தொடக்கத்திலேயே கண்காணித்து அடையாளம் காண வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் இப்போது பார்க்கலாம். ​

மெதுவாக காயும் புண்கள்

 உடலில் காயங்கள் அல்லது வெட்டுக்காயங்கள் வழக்கத்தைவிட மெதுவாக குணமடைகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நபருக்கு கால்களில் சேற்றுப்புண்கள் அல்லது தோல் தொற்று விரைவில் குணமடையாமல் இருப்பது மற்றொரு அறிகுறியாக இருக்கலாம்.

 பெண்களுக்கு நீரிழிவு இருந்தால் சிறுநீர்ப்பை தொற்று அல்லது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம். ​

அதிகரித்த பசி

 ஒருவர் அதிக சர்க்கரை தேவையை உணர்வதோ அல்லது அதிகம் சாப்பிட வேண்டும் என்பதுபோல் உணர்வதோ நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

 குறிப்பாக, பெரியவர்களுக்கு. ஒரு நபர் வழக்கத்தைவிட அதிக பசியை உணர்ந்தால், அது பாலிஃபேஜியாவாக இருக்கலாம். இது அதிக சர்க்கரை உணவுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது. ​

images/content-image/1694506970.jpg

சருமத்தில் அரிப்பு

 சரும அழற்சி இருந்தால் தான் சருமத்தில் அரிப்பை உண்டு செய்யும் என்பது கிடையாது. சருமம் நீரிழப்பால் நாளடைவில் வறண்ட சருமமாக மாறும் இது அரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

 அவ்வபோது சருமத்தை சொறியும் உணர்வை நீங்கள் பெற்றால் அது நீரிழிவு நோய் எச்சரிக்கை அலாரமாக இருக்கலாம். ​

தலைச்சுற்றல் அல்லது மயக்கம்

ஒரு நபர் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், மயக்கம் ஏற்பட்டால், அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டால் அது குறைந்த ரத்த சர்க்கரை அளவின் காரணமாக இருக்கலாம். 

நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறையவும் நேரலாம். இது ரத்தச் சர்க்கரைக் குறைவு (ஹைபோகிளைசீமியா) என்று அழைக்கப்படுகிறது. ​

ஈறுப் பிரச்சினைகள்

 பல் ஈறுகளில் வலி, வீக்கம் அல்லது சிவத்தல் ஆகியவை நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தையும் நீரிழிவு பாதிக்கலாம். இது ஈறு தொற்று, பற்களுக்கு பிடிமானம் தரும் எலும்புகளில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ​

சோர்வு

ஒருவர் வழக்கத்தைவிட அதிக சோர்வாக உணர்ந்தால் அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் உள்ள உயர் ரத்த சர்க்கரையின் காரணமாக இப்படி ஏற்படலாம்.

 குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உடலை இது அனுமதிப்பதில்லை. இதனால் உடல் ஆற்றல் இல்லாமல் சோர்வை எதிர்கொள்கிறது. ​

images/content-image/1694507046.jpg

மங்கிய பார்வை

 உயர் ரத்த சர்க்கரை அளவுகள் விழி லென்ஸில் இருந்து திரவங்களை வெளியேற்றுவதால், கண்களை கவனம்குவித்துப் பார்ப்பது கடினமாக இருப்பதால், ஒருவருக்கு பார்வை மங்கலாகிறது.

 நீரிழிவு நோய்க்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், விழித்திரைக்கு பின்னால் புதிய ரத்த நாளங்கள் உருவாகி, ஏற்கனவே உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது பகுதி அல்லது முழுமையான பார்வை இழப்புக்கும் வழிவகுக்கும்.

 ​வாய் வறட்சி

 நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறி வாய் வறட்சி. ஒரு நபர் வறண்ட, வெடித்துப்போன உதடுகள் அல்லது சொரசொரப்பான நாக்கு போன்றவற்றை உணரலாம். 

வாய் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாதபோது இந்த உணர்வு ஏற்படுகிறது. ​

அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகமெடுத்தல்

 அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகமெடுத்தல் ரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸை நீரிழிவு உருவாக்குகிறது, 

இது சிறுநீரகங்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கிறது. சிறுநீரகங்கள் இந்த குளுக்கோஸை வடிகட்ட போராடுவதால், அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.

 மேலும் உடலில் இருந்து திரவங்களையும் சிறுநீரகம் இழுத்துச் சேர்க்கிறது. இது வழக்கத்தைவிட அதிக தாகத்தை உணர வைக்கும் (பாலிடிப்சியா), இதனால் ஒருவர் அதிக திரவங்களை அருந்தி அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1694504164.jpg