புட்டினை சந்திக்கும் வடகொரிய தலைவர்: சர்வதேச நிபுணர்களின் கண்ணோட்டம்!

#world_news #NorthKorea #Lanka4 #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
புட்டினை சந்திக்கும் வடகொரிய தலைவர்: சர்வதேச நிபுணர்களின் கண்ணோட்டம்!

வடகொரியாவும் ரஷ்யாவும் ஒரே அணியில் இணையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இரு நாடுகளின் ஆயுத பலம் தொடர்பில் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. 

ரஷ்ய துறைமுக நகரமான Vladivostok-ல் விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜோங் உன் ஆகிய இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

வெளியான தகவலின் அடிப்படையில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், அது கண்டிப்பாக எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். 

இந்த சந்திப்பில், வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுத விநியோகம் முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்கிறார்கள். அது மாத்திரமன்றி , உலக அரங்கில் புதிய கூட்டணிக்கான வாய்ப்பாகவும் இந்த சந்திப்பு மாறலாம் எனக்  கூறப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்ய போரை தொடர்ந்து ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் வடகொரியாவுடனான நெருக்கத்தை அதிகரித்துள்ளது. 

பொதுவாக பார்க்கும் போது உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட இரு நாடுகளினுடைய ஒன்றிணைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் எனவும், குறிப்பாக மேற்குலக நாடுகடுகளுக்கு  சவாலாகமாறும் என்றும் எதிர்வுக்கூறப்படுகிறது. 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4