கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் தாக்கம் : 150 பேர் பலி!

#world_news #Lanka4 #Flood #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் தாக்கம் : 150 பேர் பலி!

கிழக்கு லிபியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய சக்திவாய்ந்த புயல் காரணமாக குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

டேனியல் புயல் கடந்த வார இறுதியில் வட ஆபிரிக்க நாட்டில் கரையை கடந்தது, இதனால் அதிகாரிகள் தீவிர அவசர நிலையை பிரகடனப்படுத்தினர். 

கடுமையான சேதங்களை ஏற்படுத்திய குறித்த புயல் காரணமாக ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதியில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கிழக்கு லிபியாவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. 

மீட்பு பணிகளில் ஈடுபட்ட 07 இராணுவ வீரர்கள் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும்  கிழக்கு லிபியாவில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர், அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டேனியல் புயல் கிழக்கு நகரங்களான பெங்காசி, சோஸ், டெர்னா மற்றும் அல்-மார்ஜ் ஆகிய நகரங்களை பாதித்துள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4