அரசியலில் குதித்துள்ள ராஜபக்சர்களின் நண்பரான பிரபல வர்த்தகர்!

#SriLanka #Sri Lanka President #Election #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
அரசியலில் குதித்துள்ள  ராஜபக்சர்களின் நண்பரான பிரபல வர்த்தகர்!

இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜயவீர  மௌபிம ஜனதா கட்சியின் மூலம் அரசியலில் பிரவேசித்துள்ளார்.

 மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். விமானம் சின்னத்தில் இவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். 

 விமானம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மவ்பிம ஜனதா கட்சியின் கட்சித் தலைவராக திலித் ஜயவீர போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வலைத்தளத்தில் தகவல் பதிவேற்றப்பட்டுள்ளது.

 இதேவேளை திலித் ஜயவீர ராஜபக்ச குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர் ஆவார். 

ராஜபக்ச குடும்பமே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழித்தது என்றும் இவர் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4