பாகிஸ்தானில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

#Accident #world_news #Bus #Lanka4
Kanimoli
2 years ago
பாகிஸ்தானில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மரியாமாபாத்துக்கு சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்றது. அங்குள்ள ஷேக்புரா பகுதி அருகே சென்றபோது சாலை வளைவில் பஸ் திரும்ப முயன்றது.

 அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4