போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை  அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி  1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் பிரச்சினைகள், விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம் என்று அதன் செயல் வணிக மேலாளர் எரந்த தில்ஹான் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

உணவு மற்றும் பானம் உள்ளிட்ட சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக 17 இரண்டு தட்டு பேருந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கமையபெந்தோட்டை, மிரிஸ்ஸ, எல்ல-வெல்லவாய, பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை இலக்காகக் கொண்டு இந்த பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் செயல் வணிக மேலாளர் எரந்த தில்ஹான் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!