புட்டினின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - பிரேசில்!

#world_news #Lanka4 #Putin #sri lanka tamil news
Thamilini
2 years ago
புட்டினின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - பிரேசில்!

அடுத்த ஆண்டு (2024) பிரேசிலில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டால் அவரது பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரேசில் அதிபர் லுலா டி சில்வா தெரிவித்துள்ளார்.  

இந்த ஆண்டு நடைபெறும்   G20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரேசில் ஜனாதிபதி, அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உக்ரைன் மீதான படையெடுப்பு குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது, 

இதன் காரணமாக, ஜி 20 உச்சி மாநாடு உட்பட பல உச்சி மாநாடுகளில் பங்கேற்பதை புதின் தவிர்த்து வருகிறார். 

எவ்வாறாயினும், அடுத்த வருடம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள G20 உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி பங்குபற்றினால், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.பிரேசில் ஜனாதிபதி என்ற வகையில் அவர் தனது நாட்டில் கைது செய்யப்பட மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4