கொழும்பில் வீடுகளுக்கே சென்று பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் வீடுகளுக்கே  சென்று பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்!

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த வேலைத்திட்டமானது நாளை (11.09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. 

நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் நாளை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4