கருங்கடலை போர்களமாக்கும் ரஷ்யா!

#War #Lanka4 #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
கருங்கடலை போர்களமாக்கும் ரஷ்யா!

ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஜி20 மூலம் தெரிந்து கொள்ளலாம் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர்  சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார். 

டெல்லியின் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்காக உலக தலைவர்கள் வருகைதந்துள்ளனர். இவர்களுக்கு அரசு முறை மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே இந்த மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீனாவின் அரச தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக அந்நாட்டி பிரதிநிகள் கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர்  சார்லஸ் மைக்கேல்,  உக்ரைன் மீதான போர் விவகாரம் குறித்து ரஷ்யாவின் நிலைப்பாடு பற்றிய ஓர் தெளிவை ஏற்படுத்த எங்களுக்கு இது ஓர் நல்ல சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டார். 

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை தொடுத்து, கருங்கடலை போர்க்களமாக மாற்றி வருகிறது என்றும். வளரும் நாடுகளுக்கு எதிரானசெயல்பாட்டில் ரஷ்யா ஈடுபடுகிறது என்றும் குற்றம் சாட்டினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4