மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 800ஐக் கடந்தது!

#world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 800ஐக் கடந்தது!

வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 820 ஆக உயர்ந்துள்ளது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தால் பாரிய பொருள், உயிர் சேதம் எற்பட்டுள்ளது.

இதில்  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள பழைய மாரகேஷ் நகரமும் சேதமடைந்துள்ளது.

நிலநடுக்கத்தின் இடிபாடுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணியாளர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்யுமாறும் அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4