முதல்முறையாக இந்தியா வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

#India #America #Biden #Visit #G_20
Prasu
2 years ago
முதல்முறையாக இந்தியா வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர். 

இதேபோன்று, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது. இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். 

அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் அதிபர் பைடனை வரவேற்றனர். புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்கிறார். 

பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது. 

இன்றைய சந்திப்பைத் தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4