பிரேசிலில் ஏற்பட்ட புயலில் சிக்கி 36 பேர் பலி: ஒரே வீட்டில் இருந்து 15 பேர் உடல்கள் மீட்பு

#India #Death #world_news #Flood #2023 #Tamilnews #Breakingnews #Died
Mani
2 years ago
பிரேசிலில் ஏற்பட்ட புயலில் சிக்கி 36 பேர் பலி:  ஒரே வீட்டில் இருந்து 15 பேர் உடல்கள் மீட்பு

வெப்பமண்டல புயல் காரணமாகத் தெற்கு பிரேசிலில் இடைவிடாத கனமழையும் வெள்ளப் பெருக்கும் நீடித்து வருவதால், அப்பகுதியில் உயிர்பலி அதிகரித்து வருகின்றது. - இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36-ஆக பதிவாகியுள்ளது. இப்பேரிடரினால் சுமார் 60 நகரங்கள் மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் அமைந்திருக்கும் மியூக்கம் நகரின் கட்டட இடிபாடுகளுக்குள், சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் உடல்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். அங்குப் பலமாக வீசி வரும் புலயலை அடுத்து அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம், பிரேசில் நாட்டின் சௌ பௌலோ மாநிலத்திலும் இடைவிடாது பெய்த கனமழையினால் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இச்சம்பவத்தில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4