கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Ministry of Education #students #education
Kanimoli
2 years ago
கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது ஆண்டுபூர்த்தி விழா நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறையானது உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக அமையும் வகையில் வடிவமைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், விரைவான கல்வி சீர்திருத்தங்கள் மூலம் மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 ஜனாதிபதியின் தலைவமையில் கல்லூரியின் 150 வது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது. இலங்கை உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். கல்விக் கொள்கையை அரசியலுக்கு அடிபணிய இடமளிக்ககூடாது. மேலும் அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவும் இடமளிக்க கூடாது. கல்விக் கொள்கையை சட்டமாக்கி அதனை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4