ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியை ஒளிப்படம் எடுத்துள்ளது!

#India #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியை ஒளிப்படம் எடுத்துள்ளது!

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் கடந்த 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட 'ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 'ஆதித்யா எல்-1' விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலா மற்றும் பூமியின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4