ஐதராபாத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

#India #Rain #HeavyRain #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ஐதராபாத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தலைநகரான ஐதராபாத் மாநகர பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

ஐதராபாத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

ஐதராபாத் மாநகர பகுதியான சாய் நகர் கணேஷ் நகர் பகுதியில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பஞ்சவாடி காலனி பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் ஆறுகள் காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெலுங்கானாவில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4