ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி

#Corona Virus #America #President #Biden #wife
Prasu
2 years ago
ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு  கொரோனா தொற்று உறுதி

ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது. 

இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இணைந்துள்ளனர் .

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் அதாவது 7-ந்தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4