அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ருபாய் அறிவித்த சாமியார்

#India #Tamil Nadu #Minister #parties
Prasu
2 years ago
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ருபாய் அறிவித்த சாமியார்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த துறவியின் அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்.

 இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!