கோப்குழு முன் முன்னிலையாகவுள்ள பல பொது நிறுவனங்கள்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இந்த வாரத்தில், பல நிறுவனங்கள் பொது நிறுவனங்கள் கோப் குழுவின் முன் அழைக்கப்பட உள்ளன.
துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகளை இன்று (05.09) கோப் குழு முன்னிலையில் அழைக்க உள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு நாளை கூடவுள்ளதுடன், இதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழுவும் இன்றும் நாளையும் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.