தலதா மாளிகைக்கு அருகில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கடமையின் போது குடிபோதையில் நடந்து கொண்டதாக கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தலதா மாளிகை பொலிஸ் நிலையத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் உடரட கலா சங்க மண்டபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை மதுபோதையில் கலவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சுவர்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 09 பழைய புகைப்படங்களை தீயிட்டு கொளுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று காலை மது போதையில் வன்முறையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்று அவரை கைது செய்து கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெற்றுக்கொண்டனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் கான்ஸ்டபிள் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.