ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டபாதை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது

#India #world_news #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Scientist #Rocket
Mani
2 years ago
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டபாதை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது 245 x 22, 459 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, 'ஆதித்யா எல்1' விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., - சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ நேற்று (செப்.,2) புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, 'லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1' என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம் 15 கோடி கிலோ மீட்டர்.

இது குறித்து, இஸ்ரோ இன்று(செப்., 03) வெளியிட்ட அறிக்கை: ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது 245 x 22, 459 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை அதிகரிக்கும் பணி மீண்டும் செப்.,5ல் நடைபெறும்.

ஆதித்யா எல்.1 விண்கலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் முதன்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4