யாழில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தல்!

#SriLanka #Jaffna #Lanka4
Thamilini
2 years ago
யாழில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தல்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று (02.09) இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய பழவியாபாரி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

கிளிநொச்சியில் இருந்து வாகனம் ஒன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவரை தாக்கிவிட்டு கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பின்னணியில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!