நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்!

#India #Moon #2023 #Tamilnews #ImportantNews #Scientist #Space
Mani
2 years ago
நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் பல்வேறு ஆய்வுப்பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரின் “RAMBHA LP” அறிவியல் ஆய்வு கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பது உறுதி செய்துள்ளதாகவும், ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4