BRICS கூட்டமைப்பில் அல்ஜீரியா இணைவதை தடுத்த இந்தியா

#India #Meeting #Brics #Algeria
Prasu
2 years ago
BRICS கூட்டமைப்பில் அல்ஜீரியா இணைவதை தடுத்த இந்தியா

BRICS கூட்டமைப்பில் இணையும் அல்ஜீரியாவின் நீண்டகால கனவு இம்முறையும் நிறைவேறாமல் போயுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு கடந்த 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் போது BRICS கூட்டமைப்பில் இணைய வேண்டுமெனும் நீண்டநாள் கனவு நிறைவேறாது அல்ஜீரியா ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பிரான்ஸின் வேண்டுகோளின் பேரில் வட ஆபிரிக்க நாடுகளுக்கு எதிராக இந்தியா தனது வீட்டோ வாக்களிப்பு முறையினை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாகவே பிரான்ஸ் உளவுத்துறை இந்திய சகாக்களை தொடர்புகொண்டு, அல்ஜீரியா கூட்டமைபில் இணைவதை தடுக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அல்ஜீரியா மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள உறவை வலுவிழக்கச் செய்யும் வகையில் பிரான்ஸ் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜரில் பிரான்ஸ் ஆதரவு அரசாங்கத்தை வெளியேற்றி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து பாரிஸ் மற்றும் அல்ஜிரியாவுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

நைஜரில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக (ECOWAS) இராணுவ நடவடிக்கையை அல்ஜீரியா எதிர்த்ததுடன், நெருக்கடி நிலைமைகளுக்கு அமைதியான தீர்வை முன்வைப்பதில் இராஜதந்திரத்தின் பங்கை வலியுறுத்தியது.

அத்துடன், அல்ஜீரிய வான்பரப்பில் பிரான்ஸ் இராணுவ விமானங்கள் பறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் தலைமையில் நைஜரில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தலையீட்டையும் Abdelmadjid Tebboune தலைமையிலான அல்ஜீரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

 இந்த நிலையிலே, பிரான்ஸுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4