இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார்!

#China #world_news #Lanka4
Thamilini
2 years ago
இந்தியாவில் நடைபெறும் G20  மாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டைத் தவிர்க்கக்கூடும் என்று இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக சீனாவை தளமாகக் கொண்ட அதிகாரிகள், பெய்ஜிங் சார்பாக இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. . 

இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களின் செய்தித் தொடர்பாளர்கள் இது குறித்துபதிலளிக்கவில்லை. 

G20  மாநாடானது, செப்டம்பர் 9-10 ஆம் திகதிகளின் இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. 

இந்தியா - சீனா இடையிலான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த கூட்டத்தில் ஜி ஜின்பிங் கலந்துகொண்டால் சுமூகநிலையை ஏற்படுத்த நல்ல தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4