வடகொரியாவிடம் ஆயுதங்களை பெற முயற்சிக்கும் ரஷ்யா!

#NorthKorea #Lanka4
Thamilini
2 years ago
வடகொரியாவிடம் ஆயுதங்களை பெற முயற்சிக்கும் ரஷ்யா!

ரஷ்யா, வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடிதங்களை பரிமாறிக்கொண்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 

இது குறித்த உளவுத் தகவல் தன்னிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி, ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு சமீபத்தில் பியோங்யாங்கிற்கு விஜயம் செய்தபோது, மாஸ்கோவிற்கு ஆயுதங்கள் விற்பனையை அதிகரிக்க வட கொரிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார் எனத் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை மேம்படுத்த கூடுதல் பீரங்கி குண்டுகள் மற்றும் பிற அடிப்படை பொருட்களை ரஷ்யா தேடுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக  கிரெம்ளின் ஆயுதங்களுக்காக வட கொரியா மற்றும் ஈரானை நம்பியுள்ளது என  பைடன் நிர்வாகம் தெரிவித்திருந்தது. வாக்னர் படையினர் வடகொரியாவிடம் இருந்து ஆயுத கப்பலை எடுத்துச் சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டை கிரெம்ளின் மறுத்திருந்தது. 

எவ்வாறாயினும் அணுசக்தி திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பதிவுகள் காரணமாக வடகொரியாவும் ஈரானும் சர்வதேச அரங்கில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4