உக்ரைனுக்கு அதிக வெடிமருந்துகளை வழங்குமாறு வலியுறுத்தல்!

#world_news #Ukraine #War #Lanka4 #Russia Ukraine
Thamilini
2 years ago
உக்ரைனுக்கு அதிக வெடிமருந்துகளை வழங்குமாறு வலியுறுத்தல்!

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர்  ஜோசப் பொரெல்  உக்ரைனுக்கு அதிக வெடிமருந்துகளை வழங்குமாறு பிற நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஸ்பெயின் நகரமான டோலிடோவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு  செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது “over-arching ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர்,  இப்போது தொழில்துறையுடனான இந்த கட்டமைப்பு ஒப்பந்தங்களுக்குள் உறுதியான உத்தரவுகளை அனுப்புவது உறுப்பு நாடுகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தியுள்ளார். 

“ஒரு முக்கிய படியாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 12 மாதங்களுக்குள் உக்ரைனுக்கு 1 மில்லியன் பீரங்கி குண்டுகள் அல்லது ஏவுகணைகளை வழங்க சுமார் 2 பில்லியன் யூரோக்கள் ($2.18 பில்லியன்) மதிப்புடைய திட்டத்திற்கு மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன. 

இதற்கான வேலைப்பாடு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், ஐரோப்பிய ஒன்றியம் அதன் இலக்கில் கால் பங்கைக் கூட எட்டவில்லை” என அவர் கூறியுள்ளார். 

ஆகவே உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4