பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

#Death #Police #world_news #Attack #International #Brazil #Killed
Mani
2 years ago
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாகியா மாகாணத்தில் அமைந்துள்ள சால்வடார் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அந்த கும்பலை சேர்ந்த மர்மநபர்கள் அருகருகே அமைந்துள்ள 2 வீடுகளுக்கு உள்ளே புகுந்து அவற்றை சூறையாடினர்.

இந்த சம்பவத்தில், ஒன்பது பேர் தீ வைத்து கொல்லப்பட்டனர், அவர்களில் மூன்று பேர் குழந்தைகள். இரண்டு நபர்களின் உடல்கள் பகுதியளவு எரிந்த நிலையில், ஐந்து நபர்களின் உடல்கள் முற்றிலும் எரிந்தன. தீயில் இருந்து 2 பேர் காயமின்றி தப்பினர். தற்போது, ​​படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டில் பாகியா மாகாணத்தில் 6,600 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது அந்நாட்டில் 2-வது மிக பெரிய எண்ணிக்கை (1 லட்சம் பேருக்கு 47.1 சதவீதம்) ஆகும். தேசிய சராசரியை (1 லட்சம் பேருக்கு 23.4 சதவீதம்) விட இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற என்.ஜி.ஓ. அமைப்பின் தகவல் தெரிவிக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4