வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண்: உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

#SriLanka #Police #CourtOrder
Prathees
2 years ago
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த  பெண்:   உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

வெலிக்கடை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்து சந்தேக நபராக ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று (29) பிற்பகல் உத்தரவிட்டார்.

 தங்கப் பொருட்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போது உயிரிழந்த 42 வயதான எஸ். ராஜேஷ்குமாரியின் வழக்கு விசாரணையின்போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

 வெலிக்கடை காவல்துறையின் வழக்கு நடவடிக்கைப் பிரிவின் நிலையத் தளபதியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கக்கூடிய சாட்சியத் தொகுப்பு அறிக்கையை அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 சந்தேகநபர் கைது செய்யப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வரையான காலப்பகுதியில் சந்தேகநபரின் காவலில் இருந்ததாகவும், அவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரியாக கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் கல்கஹேவா தெரிவித்தார். 

 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை சாட்சியங்களின் மூலம் தெரியவருவதாகவும், சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதனர் அது தொடர்பில் அறிந்திருப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் கல்கஹேவா நீதிமன்றில் தெரிவித்தார். 

 குறித்த பெண்ணின் மரணத்தின் பின்னர்இ சந்தேகநபரின் அறிவுறுத்தலின் பேரில் இறந்தவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் தெரிவித்தார்.

 சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராஜித கொடித்துவக்குஇ தனது கட்சிக்காரர் இன்னும் ஒரு வருடத்தில் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், உயிரிழந்தவர் பொலிஸாருக்குள்ளும் வெளியிலும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமை அவருக்கு தெரியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

 குறித்த அதிகாரியை தனக்கும் தெரியும் எனவும் அவர் இந்த நீதிமன்றில் சேவையில் இணைந்து சுமார் 1 1/2 வருடங்களாக வெலிக்கடை பொலிஸாருக்கான வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மேலதிக நீதவான் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4