ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள தடைகள்

#India #Meeting #Ban
Prasu
2 years ago
ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள தடைகள்

ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. 

வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்பட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிலைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.ஏ.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 அதன்படி இந்த பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான தடை உத்தரவு இன்று (ஆகஸ்ட் 29) துவங்கி, செப்டம்பர் 12-ம் தேதி ஆகிய 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4